Thursday, April 26, 2007
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
(புல்லாங்குழல் )
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்- எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்
(புல்லாங்குழல் )
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்- அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன
(புல்லாங்குழல் )
பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர்முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.
(புல்லாங்குழல் )
பாடியவர்:டி.எம்.சௌந்தர்ராஜன்.
Wednesday, April 25, 2007
ஆயர்பாடி மாளிகையில்...
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
(ஆயர்பாடி)
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி)
நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்
மோக நிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி)
கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ -அவன்
பொன்னழகைக் காண்பதற்கும் போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி)
பாடியவர்:எஸ்.பி.பால சுப்பிரமணியம்
Thursday, April 12, 2007
மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !
மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே {மலர்போல் }
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,
நதி காய நேராமல் நீரூற்று தாயே
இந்நிலம் பார்த்து நீயே..!
எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாழ்த்தாமல் வசைக்காட்டு தாயே!
என் வளமான தாயே!
பசிதாகம் காணாமல் வயிறாக்கு தாயே...
இசைப்போர்கள் செவிதேடி இசை ஊட்டு தாயே..!{மலர் போல }
புவி மீதில் இறைஞானம் எமை என்றும் நாட
ஒரு குறையாமல் வாழ
அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்,
தெளிவோடு தினம் காண நிலை வேண்டும்
வேண்டுமது அது திரளாக வேண்டும் ,
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே...
உறவோடு மகிழ்வோடு என்னை மாற்று தாயே !{மலர்போல}
நன்றி:
விசாலம் அம்மாவின்: http://meerambika.blogspot.com/2007/04/blog-post_7414.html
Subscribe to:
Posts (Atom)