Saturday, May 19, 2007

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்...

பாடல்: எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: திலாங்
தாளம்: ஆதி

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்
எங்கள் இறைவா இறைவா இறைவா!

(எத்தனை)

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்

(எத்தனை)

முக்தியென்ற்றொரு நிலை சமைத்தாய் - அங்கு
முழுதினையும் உணரும் உணர்வமைத்தாய்
பக்தியென்றொரு நிலை வகுத்தாய் - எங்கள்
பரமா பரமா பரமா

(எத்தனை)

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!

எம். எஸ். பாடின இந்தப் பாட்ட கேட்டுருக்கீங்களா? ரொம்ப உருக்கமான பாட்டு. மூதறிஞர் இராஜாஜி எழுதினது.

கண்ணன் குந்தி தேவிக்கிட்ட என்ன வரம் வேணும்ன்னு கேட்டப்ப, 'எனக்கு எப்பவும் ஏதாவது கஷ்டம் இருக்கணும்'ன்னு வரம் கேட்டாங்களாம். கண்ணன் ஆச்சரியமாய் 'ஏம்மா...எல்லாரும் கஷ்டமே வரக்கூடாதுன்னுதான் வரம் கேப்பாங்க...நீங்க கஷ்டம் வேணும்ன்னு கேக்கறீங்களே'ன்னு கேட்டதுக்கு, 'கண்ணா. கஷ்டம் வர்ரப்பதான் மக்களுக்கு உன் நினைப்பே வரும். நான் எப்பவும் உன் நினைப்பாவே இருக்கணும்ன்னு நினைக்கறேன். அதான் அந்த வரம் கேட்டேன்'னு சொன்னாங்களாம்.

இந்தப் பாட்டுல 'நீயிருக்கிறப்ப எனக்கு எந்த குறையும் இல்ல' அப்படின்னு இராஜாஜி எழுதியிருக்கார். மொதல்ல பாட்டை முழுசா குடுத்துட்றேன். அப்புறம் வரிகளோட அர்த்தம் பார்க்கலாம்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா
யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

வேத உருவானவனே (மறைமூர்த்தி) கண்ணா...எனக்கு எந்தக் குறையும் இல்லை. பசுக்களை (உயிர்களை, எங்களை) மேய்ப்பவனாய் (காப்பவனாய்), கோவிந்தனாய் நீயிருக்கும் போது எனக்கு எந்தக் குறையும் இல்லை.

எல்லா இடத்திலும் நீ நிறைந்து ஆனால் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கிறாய் கண்ணா...அதனால் என்ன...நீ எங்கும் இருக்கிறாய் என்னைக் காப்பதற்கு...அது போதும் எனக்கு. எந்தக் குறையும் இல்லை எனக்கு. நான் எது கேட்டாலும் கொடுப்பதற்குத் தயாராய் வேங்கடேசன் ஆகிய நீயிருக்கும் போது எனக்கு வேறு என்ன வேண்டும் உன்னைத் தவிர...வேதங்கள் சொல்லும் மெய்ப்பொருளே கண்ணா...நீலமணி போன்ற மேனி வண்ணம் கொண்டவா...திருமலையில் நிற்கும் என் அப்பா...என்னைக் காப்பவனே கோவிந்தா...

மாயமாய் திரையின் பின்னால் நிற்பது போல் மறைந்து நிற்கிறாய் கண்ணா...உன்னை இரகசியமான மறைப்பொருளை அறிந்த ஞானியர் மட்டுமே உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண்கிறார்...என்றாலும் எனக்கு எந்தக் குறையும் இல்லை கண்ணா...நீ திருமலையின் மேல் கல்லாய் நிற்கின்றாய்...அது போதும் எனக்கு...நான் உன்னை நன்றாக தரிசனம் செய்து கொள்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா...

வேறு யுகங்களில் மக்கள் உன்னை தவம், தியானம், யாகம் போன்ற பலவற்றைச் செய்து கண்டனர். இந்த கலியுகத்திலோ மக்களால் அதையெல்லாம் எளிதாய் செய்யமுடியாது... அதனால் எங்களுக்கு இரங்கி நீ கற்சிலையில் இறங்கி நிலையாக திருமலைக் கோவிலிலே காட்சி தருகிறாய்... அழகிய சுருள்முடியை உடைய கேஸவா... மலையப்பா...நீ எது கேட்டாலும் இல்லை என்று சொல்வதில்லை...உன் மார்பில் எது கேட்டாலும் கொடுப்பதற்கு நிற்கும் கருணைக்கடலாகிய அன்னை மஹாலக்ஷ்மி இருக்கும் போது...நான் செய்த புண்ணிய பாபங்களைப் பார்த்து நீ கூட சில நேரம் நான் கேட்பதைத் தர யோசிக்கலாம்...ஆனால் அன்னையோ அப்படி அல்ல...அவள் கருணைக்கடல்...என் தகுதியையும் பாராமல் எது கேட்டாலும் தருவாள்...அப்படி இருக்கும் போது எனக்கு என்ன குறை இருக்க முடியும். எந்தக் குறையும் இல்லை கண்ணா... மணிவண்ணா... மலையப்பா... கோவிந்தா...கோவிந்தா....
(நன்றி:
குமரன் (Kumaran)
http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html )



இந்த தளத்தில் கேட்கலாம்
http://www.raaga.com/channels/tamil/artist/MS._Subbulakshmi.html


இந்த தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://www.geocities.com/promiserani2/c1296.html

http://odeo.com/audio/1780963/view


குமரன் அவர்களின் இந்த தளத்தில்
இந்த பாடலை ஆன்லைனிலேயே பார்க்கலாம்.
http://kelpidi.blogspot.com/2006/06/blog-post_17.html

Friday, May 4, 2007

ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே...!




ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே

(ஆதி)

வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே

(ஆதி)

நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா - அந்த
நாதத்துக்கே பெருமை தந்த ஜீவன் அல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா

(ஆதி)

படம் : திருவருட்செல்வர்
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்


Thursday, April 26, 2007

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

(
புல்லாங்குழல் )

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்
- எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்

(புல்லாங்குழல் )

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
- அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன

(
புல்லாங்குழல் )

பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர்முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
- நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.


(
புல்லாங்குழல் )

பாடியவர்:டி.எம்.சௌந்தர்ராஜன்.

Wednesday, April 25, 2007

ஆயர்பாடி மாளிகையில்...


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின்
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
ஓய்வெடுத்துத் தூங்குகின்றான் தாலேலோ
(
ஆயர்பாடி)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து
மன்னவன்போல் லீலை செய்தான்
தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(
ஆயர்பாடி)

நாகப்படம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்
மோக நிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ -அவன்
பொன்னழகைக் காண்பதற்கும் போதை முத்தம் கேட்பதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ
(ஆயர்பாடி)

பாடியவர்:எஸ்.பி.பால சுப்பிரமணியம்

Thursday, April 12, 2007

மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !


மலர்போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே !
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!

வரம் தரும் அன்னையே
வணங்கினோம் உன்னையே {மலர்போல் }

ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே,
நதி காய நேராமல் நீரூற்று தாயே
இந்நிலம் பார்த்து நீயே..!
எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாழ்த்தாமல் வசைக்காட்டு தாயே!
என் வளமான தாயே!
பசிதாகம் காணாமல் வயிறாக்கு தாயே...
இசைப்போர்கள் செவிதேடி இசை ஊட்டு தாயே..!{மலர் போல }

புகழ் செல்வம் நலம் கல்வி குறவின்றி வாழ
புவி மீதில் இறைஞானம் எமை என்றும் நாட

ஒரு குறையாமல் வாழ

அருளோடு பொருள் வேத அறிவோடு ஞானம்,

தெளிவோடு தினம் காண நிலை வேண்டும்

வேண்டுமது அது திரளாக வேண்டும் ,

பல வீடு பல நாடு பல தேசம் என்று

உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே...

உறவோடு மகிழ்வோடு என்னை மாற்று தாயே !{மலர்போல}

நன்றி:
விசாலம் அம்மாவின்: http://meerambika.blogspot.com/2007/04/blog-post_7414.html

Sunday, March 25, 2007

நாடிவந்த செல்வம் தன்னை




















முன்பெல்லாம் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான இந்தப்பாடல் இப்பொழுது எங்கும் கேட்க முடியவில்லை. தனித்திரட்டுகளிலோ சி.டி.வடிவிலோ இருப்பதாகவும் தெரியவில்லை.
இளையராஜாவின் குரலில் இனிமை சேர்க்கும் இந்தப்பாடல். பலமுறை கேட்டும், பாடியும் இருப்பதால் முழுவதுமாக நினைவில் இருக்கிறது
இந்தப்பாடல்.


நாடிவந்த செல்வம்தன்னை ஏழைகட்கு நீ கொடுத்து
நாட்கள் முற்றும் பாடு கண்ணனை
நல்லவர்கள் சொற்சரத்தில் உள்ளம் முற்றுமே இணைத்து
நாளும் பாடு கீதை வர்ணனை
நாளும் பாடு கீதை வர்ணனை!
(நாடி வந்த)

தேடி ஓடு ஈசன் பாதம் ஓது ஓது தேவ வேதம்
செய்கை என்றும் தெய்வ சிந்தனை
சிறிது மட்டும் சொன்னதுண்டு அதிகம் சொல்லத் தேவையில்லை
தீமையாகும் தெய்வ நிந்தனை!
(நாடி வந்த)

கோடி கோடி வந்த போதும் நோய் நொடிக்கு நீ இலக்கு
கூடுவாய் அத்தேவன் பாதமே
கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில் கீதை சொன்ன
கோகுலனைப் பாடு உள்ளமே!


(நாடி வந்த)

ஜனனி ஜனனி...






படம் :தாய் மூகாம்பிகை
குரல் :இளையராஜா
இசை :இளையராஜா



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ.. (3)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..



ஒரு மான் மருவும் சிறு பூந்திரையும்..

சடை வார் குழலும்.. இடை வாகனமும்.. (2)

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே..

நின்ற நாயகியே.. இட வாகத்திலே.. (2)

ஜகன் மோகினி நீ.. சிம்ம வாகினி நீ (3)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ..


சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்..

ஷண்மார்க்கங்களும்.. சப்த தீர்த்தங்களும்.. (2)

அஷ்ட யோகங்களும்.. நவ யாகங்களும்..

தொழும் பூங்கடலே.. மலை மாமகளே.. (2)

அலை மாமகளே கலை மாமகளே.. (3)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ..



ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே... மூகாம்பிகையே.. (2)

பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்..

பணிந்தே துவளும் மணி நேத்திரங்கள்.. (2)

சக்தி பீடமும் நீ.. ஆ...

சக்தி பீடமும் நீ.. சர்வ மோட்சமும் நீ (4)



ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜக காரணி நீ.. பரிபூரணி நீ.. (2)

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ..

ஜனனி ஜனனி.. ஜனனி ஜனனி..

ஜனனி ஜனனி.. ஜகம் நீ.. அகம் நீ.. (2)