ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே - எங்கள்
ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே
(ஆதி)
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே
(ஆதி)
நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா - அந்த
நாதத்துக்கே பெருமை தந்த ஜீவன் அல்லவா
பேசும் தமிழ்ப் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா - அதைப்
பிள்ளைத் தமிழ் என்று சொன்ன அன்னையல்லவா
(ஆதி)
படம் : திருவருட்செல்வர்
குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : கே.வி.மஹாதேவன்
Friday, May 4, 2007
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே...!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல வரி கொண்ட ஒரு பக்தி பாடல்.
நல்ல பாடல், பாடலுக்கு சுட்டி ஏதும் இல்லையா?
Post a Comment