Thursday, April 26, 2007

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்

(
புல்லாங்குழல் )

பன்னீர் மலர் சொரியும் மேகங்களே-எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்
- எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களேன்

(புல்லாங்குழல் )

குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
- அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன

(
புல்லாங்குழல் )

பாஞ்சாலி புகழ் காக்க தன்கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர்முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
- நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்.


(
புல்லாங்குழல் )

பாடியவர்:டி.எம்.சௌந்தர்ராஜன்.

2 comments:

rahini said...

இசையின் மகத்துவம் கண்டேன்
இங்கே..

மஞ்சூர் ராசா said...

மிகவும் பிடித்த பாடல்.
மேலும் அனைத்து பாடல்களும் அருமையான வண்ணப்படங்களுடன் ஜொலிக்கிறது.
வாழ்த்துக்கள்.